ஹட்டன் - நோர்வூட் நகரில் இடம்பெற்ற மோதலில் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்கு இடையில் இந்த மோதம் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், இ.தொ.கவின் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்களான சூசை அலக்சான்டர், என்.ராமச்சந்திரன் மற்றும் தொ.தே.சங்கத்தின் பிரதேசசபை உறுப்பிர் பா.சிவனேசன் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தின் போது மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் வாகனமும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வாகனமும் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.