Monday, March 19, 2018

How Lanka

யாழில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.


புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்ற புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில், பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், பொலிஸ்மாதிபர் பூஜித ஜெயசுந்தர, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பாடசாலை அதிபர், அருட்தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.