Wednesday, March 14, 2018

How Lanka

உலகையே திரும்பி பார்க்கவைத்த ஸ்டீபன் ஹாக்கிங் ஜன்ஸ்டீன் பிறந்த நாளில் மறைந்தார்

50 வருடங்கள் அறிவியல் உலகை கண் அசைவில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை கற்றுத் தந்த பாடம் வரலாற்றில் தனித்துவம் மிக்கது என்றாலும் மிகையாகாது.

பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்றைய தினம் மரணமடைந்து இருக்கிறார். இவரது வாழ்க்கை ஒரு அறிவியல் ரோலர் கோஸ்டர் பயணம் என்று கூட சொல்லலாம்.

பிரித்தானியா நாட்டில் லண்டன் அருகில் சிறிய நகரத்தில் பிறந்தவர் தான் சாதனை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஆரம்ப காலத்தில் அப்பாவின் ஆசைப்படி வைத்தியராக ஆக ஆசைப்பட்டார். ஆனால் அவருக்காக உலகம் பல ஆச்சர்யங்களுடன் காத்து இருந்தது.

இவரின் கல்வி செயின்ட் அல்பான்ஸ் என்னும் சிறிய பள்ளியில் தொடங்கியது. வறுமையிலும் சாதிக்க துடித்த இவருக்கு ஆரம்ப கட்டமாக அமைந்தது அந்த சிறிய பள்ளியில்தான்.

இவருக்கு 21 வயது இருக்கும் போது நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்டது. இது ''அமியோடிராபிக் ஸ்கிலோரோசிஸ்'' வகையை சார்ந்த நரம்பியல் குறைபாடு ஆகும்.

இதனால் இவர் உடல் மொத்தமும் இயங்காமல் போனது. கழுத்துக்கு கீழ் இவரால் எதையும் அசைக்க முடியவில்லை.

இவர் இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்று 23 வயதை கடைசி வருடமாக வைத்தியர்கள் குறித்தார்கள்.


ஆனால் அப்போதும் கூட மனம் தளராமல், இவர் கேம்பிரிட்ஜில் டாக்டர் பட்டம் படிக்க சென்றார். அந்த தன்னம்பிக்கைதான் இவரது வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம்.

நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.


நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகளில் இறங்கினார். இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது.

அதன்பின் நடந்தது வரலாறு, அறிவியல் சரித்திரம். இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் வெளியானது.

50 வருடங்கள் இவர் ஒரே இருக்கையில் இருந்தார். ஆனால் உலகமே இவரை சுற்றி வந்தது. ஒரு முறை அவரது வீட்டில் பெரிய விருந்து ஏற்பாடு செய்துவிட்டு, எதிர்கால சந்ததிக்காக காத்து இருந்தார். ஆனால் அப்போது யாரும் டைம் டிராவல் செய்து அவரை பார்க்க வரவில்லை.
""
அப்போது அவர் இப்படி கூறினார் ''இப்போது என்னை யாரும் பார்க்க வரவில்லை. ஆனால் ஒருநாள் நீங்கள் எதிர்காலத்தில் இருந்து யாரையாவது பார்க்க கடந்த காலத்திற்கு செல்வீர்கள்'' என்று குறிப்பிட்டார்.  ""

அண்டம் குறித்து ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு இவர்தான் காரணம் என்று சொல்லலாம். அதே போல உலகமே பெருவெடிப்பு எனப்படும் பிக் பேங்க் குறித்து பேசிய போது, இவர் மட்டும்தான் கருந்துளை எனப்படும் பிளாக் ஹோல் குறித்து பேசினார். பிளாக் ஹோல் தான் இந்த பிரபஞ்சத்தின் முடிவாகும்.

கடவுள் துகள்' எனப்படும் 'ஹிக்ஸ் போஸன்' இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"   பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த 'கடவுள் துகள்' நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்பது ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கையாகும்.   "
 1970 ஆம் ஆண்டு அவர் கருந்துளைகள் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன என்னும் தனது புகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு ” நாம் தனியாகவா இருக்கிறோம்?”என்னும் கேள்வியின் விடையைக் கண்டறியும் விதத்தில் வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்னும் ஆய்வுகளை துவங்க உதவினார்.

இரு முறை திருமணம் செய்த அவருக்கு மூன்று பிள்ளைகளும் மூன்று பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

சோதனைகளும் வேதனைகளும் ஏராளமாக இருந்தாலும் அறிவியல் உலகில் அவர் புரிந்த சாதனைகள் ஏராளம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Sir Isaac Newton வகித்த Lucasian Professor of Mathematics என்னும் புகழ் பெற்ற பொறுப்பை அவர் வகித்தார்.

சுமார் 12 கௌரவப் பட்டங்கள் வகித்த அவருக்கு பிரித்தானியாவின் உயரிய கௌரவமாகி Commander in the Most Excellent Order of the British Empire என்னும் பட்டம் வழங்கப்பட்டது.


 பிரித்தானியராக இருந்தாலும் அறிவியல் உலகில் அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவின் உயரிய கௌரவமாகிய Presidential Medal of Freedom அமெரிக்க ஜனாதிபதி Barack Obamaவால் அளிக்கப்பட்டது.

எவ்வளவோ கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், பேரும் புகழும் இருந்தாலும், எப்போதும் மக்கள் பூமியில் மட்டும் வாழாமல் அதையும் தாண்டி இன்னொரு கிரகத்திற்கும் சென்று வாழ வேண்டும் என்னும் ஆசை கொண்டவர்.

ஆனால்........
 “ எவ்வளவு பெரிய விண்வெளியாக இருந்தாலும் நீங்கள் நேசிக்கும் மனிதர்கள் அங்கு இல்லாவிட்டால் அதினால் பயன் எதுவும் இல்லை”  என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் வார்த்தைகளின் பின்னால் அன்புக்கான ஒரு ஏக்கம் இருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?

இவரது ஆராய்ச்சிகள், கருத்துக்களை பார்த்த உலக விஞ்ஞானிகள் இவரை சுற்றி சுற்றி வந்தார்கள்.

எவ்வளவோ கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், பேரும் புகழும் இருந்தாலும், எப்போதும் மக்கள் பூமியில் மட்டும் வாழாமல் அதையும் தாண்டி இன்னொரு கிரகத்திற்கும் சென்று வாழ வேண்டும் என்னும் ஆசை கொண்டிருந்தவர்.

""  இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் ஹாக்கிங் என்பதில் சந்தேகமே இல்லை. அவரின் பிரிவு பிரித்தானியாவிற்கு மட்டும் அல்ல. முழு உலகிற்கும் சோகத்தை கொடுத்துள்ளது.  ""