பாகிஸ்தான் சுதந்திரத்தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நுன் ஹூசேனின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரமே ஜனாதிபதி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதியின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நுன் ஹூசேன் மற்றும் அந்நாட்டு பிரதமர் ஷாஹீத் கபான் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் 4 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சுதந்திரத் தினம் நாளை கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.