தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வார்னர் 63 ரன்கள் அடிக்க, ரபாடா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டி வில்லியர்சின் அபார சதம் (126 அவுட் இல்லை), டீன் எல்கர் (57), அம்லா (56) அரைசதங்களால் 382 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
139 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கவாஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்தார்.
இவரது ஆட்டத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 39 ரன்னுடனும், பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெய்ன் தாக்குப்பிடித்து விளையாட மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அதன்பின் வந்த கம்மின்ஸை 5 ரன்னில் வெற்றியேற்றினார். இதன்மூலம் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.
அடுத்து வந்த ஸ்டார்க் 1 ரன்னிலும், நாதன் லயன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 211 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.
கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஹசில்வுட் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பெய்ன் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 6 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 139 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஒட்டுமொத்தமாக சரியாக 100 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எய்டன் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 22 ரன்னாக இருக்கும்போது எல்கர் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய மார்கிராம் 21 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த அம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி முறையே 27, 28 ரன்கள் எடுத்தனர்.
டி வில்லியர்ஸ் அவுட்டாகும்போது தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் டி ப்ரூயின் ஜோடி சேர்ந்தார். அப்போது தென்ஆப்பிரிக்காவிற்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
டு பிளிசிஸ் நிதானமாக விளையாட, டு பரூயின் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 15 ரன்கள் எடுக்க, தென்ஆப்பிரிக்கா 22.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
11 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் 22-ந்தேதி தொடங்குகிறது.