மும்பை அணி வீரரான ஹார்திக் பாண்ட்யா மெக்ஸ்வேல் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்துள்ளார்
ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் நேற்று மும்பை-டெல்லி அணிகள் மோதின. பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட மும்பை அணி நேற்று டெல்லி அணியிடமும் தோல்வியடைந்து இந்த ஐபிஎல் தொடரில் தொடரில் தொடர் மூன்றாவது தோல்வியை பதிவு செய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 13-வது ஓவரை மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கருணல் பாண்ட்யா வீசினார்.
அந்த ஓவரை எதிர் கொண்ட மேக்ஸ்வேல் ஆப் திசையில் அதிரடியாக பறக்க விட, அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த பாண்ட்யா அபாரமாக அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்தார்.
பிடிக்க முடியாது என்று நினைத்த மெக்ஸ்வேல்ஸ் இந்த கேட்சை பார்த்தவுடன் ஷாக் ஆகிய நிலையில் பெளலியன் திரும்பினார்.
மேலும் 2018- ஐபிஎல்லில் அந்தரத்தில் பறந்து முதல் கேட்ச் பிடித்த வீரர் என்ற பெருமையையும் பாண்ட்யா பெற்றுள்ளார்.