Tuesday, April 24, 2018

How Lanka

தமிழரான சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் இந்திய ரூபா 2,508 கோடி பெறுமதியான பங்குகளை வழங்கியுள்ளது

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பங்குளின் இந்திய பெறுமதி 2,508 கோடி ரூபாவாகும்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடமையாற்றி வரும் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் ஆவார்.

இவர் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் இவருக்கு 2014ம் ஆண்டு ஏராளமான பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியது.

கூகுள் நிறுவன விதிமுறைப்படி அதன் அதிகாரிக்கு வழங்கப்படும் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.

சுந்தர் பிச்சைக்கு பங்குகள் வழங்கப்பட்டு நாளை 25ம் திகதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றது. அந்த பங்குகள் மீதான முழு உரிமையும் சுந்தர் பிச்சை பெற்றுக்கொள்வதனால் இனி அவர் அந்த பங்குகளை விற்க முடியும்.

2014ம் ஆண்டு வழங்கப்பட்ட பங்குகளின் தற்போதைய இந்திய பெறுமதி 2,508 கோடி ரூபா ஆகும். சமீப காலங்களில் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது ஊழியருக்கு வழங்கும் அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகின்றது.

2015 மற்றும் 2016ம் ஆண்டிலும் சுந்தர் பிச்சைக்கு பல பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டிற்கான பங்கு மதிப்புகளை கூகுள் நிறுவனம் இதுவரை குறிப்பிடவில்லை.