Sunday, April 22, 2018

How Lanka

ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் காபுலில் 63 பேர் வரையில் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இன்று இந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம் ஆரம்பமாகியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.