Wednesday, April 11, 2018

How Lanka

குறைந்த விலையில் எரிபொருள் விநியோகத்தால் அரசாங்கத்திற்கு 989 கோடி ரூபா நஷ்டமாம்

அரசாங்கம், பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஒரே தலைவர், ஒரே வேலைத்திட்டம், ஒரே அரசாங்கம் என்ற கோட்பாட்டின் கீழ் அரசாங்கம் எதிர்காலத்திலும் செயற்படும்.

இந்நிலையில், தர்க்க ரீதியான விடயதானங்களின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

கடந்த இரு மாதங்களில் மாத்திரம் குறைந்த விலையில் எரிபொருள் விநியோகத்தால் அரசாங்கம் 989 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.