யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றும் நடன ஆசிரியைக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி அவரை கொடூரமாக கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
அதனை தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது.
இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.