சிரியா மீது தாக்குதல் நடாத்தினால் அதற்குப் பதில் தாக்குதல் ஒன்றினூடாக அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் வசிலி நெபென்சியா இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “ சிரியா அரசாங்கம் அந்நாட்டு சிவில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தி அமெரிக்க தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும், சிரியாவின் நெருக்கடியை அடிப்படையாக வைத்து அமெரிக்காவுடன் யுத்தமொன்றுக்கு தொடர்புபடுவதற்கு தான் பின்நிற்கப் போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிரியா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அதில் தாமும் இணைந்துகொள்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியா பிரதமர் தெரேசா மே இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், பிரான்சும் சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அதற்கு தாமும் ஒத்துழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போர் வலுபெற்றுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.