சிரியாவுக்கு அதிக அளவு ரசாயன ஆயுதங்களை வட கொரியா வழங்கி வருவதால் தான் ஆசாத் அரசு ஆட்சியில் நீடித்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆசாத் அரசு கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் கிளர்ச்சியாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த பகுதியில் ஆசாத் அரசு நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 80 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஆசாத் அரசுக்கு ரசாயன ஆயுதங்களை வட கொரியா நாடு வழங்கி வருவதாகவும், இதுவரை பல பில்லியன் டொலர்கள் மதிப்பில் ரசாயன ஆயுதங்களை பல முறை சிரியாவுக்கு வடகொரியாவின் கிம் அரசு அனுப்பியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் இருந்து மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படும் ரசாயன ஆயுதங்களின் ஆதாரங்கள் சிரியாவில் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து திரட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி சிரியாவில் செயல்படும் ரசாயன ஆயுத ஆலைகலை வடிவமைத்து செயல்படுத்துவதும் வடகொரியா என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசாத் அரசு ரசாயன தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பின்னரே அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியா மீது தாக்குதல் மேற்கொண்டது.
இந்த நிலையில் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. இதில் சிரியாவுக்கு ரசாயன ஆயுதங்கள் வழங்கியது தொடர்பில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.