திக்கம் வடிசாலையை புனரமைத்து, அதை நம்பி வாழ்வோரின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.
அமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் நேரில் கோரிக்கை.
வடமராட்சி திக்கம் வடிசாலையினை நவீன முறையில் மறுசீரமைத்து பனைசார் தொழிலாளாகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (25.04.2018) கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநதன் அவர்களுக்கும்,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தின் மாவட்டங்களின் அமைப்பாளர்கள் உள்ளடங்கிய விசேட குழுவினருக்குமிடையேயான சந்திப்பின்போதே ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மேற்படி கோரிக்கையினை விடுத்தார்.
திக்கம் வடிசாலை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த ரங்கேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,திக்கம் வடிசாலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் உள்ளமையால்,அத்தொழிற்சாலையை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பனைசார் உற்பத்தித் தொழிலை நம்பிவாழும் தொழிலாளர்கள்மிகவும் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதையம் தெளிவுபடுத்தியதுடன் அத்தொழில் சமூகம் சார்ந்த மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்ப வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள், திக்கம் வடிசாலையினை நவீன முறையில் புனரமைப்பு செய்வதற்கு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தனியான திட்ட முகாமையாளர் ஒருவரை நியமித்து வெகுவிரைவில் அதனை நடைமுறைப்படுத்த தனது அமைச்சு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதி அளித்தார்.
இச்செய்தியானது EPDP இன் ஊடகப்பிரிவினரால் எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை