கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த பேருந்துடன் லொரி ஒன்று நேருக்கு நேர் மோதியதினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ரண்வல சந்தியில் கடந்த வாரம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரணமாக நாளொன்று மூன்று முதல் ஐந்து வரை பேர் விபத்துகள் காரணமாக உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதி போக்குவரத்துகளை மதிக்காமல் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.