இலங்கையில் குற்றவாளி கூண்டில் ஏறி குற்றத்தை ஒப்புக் கொண்ட இளம் பெண் சட்டத்தரணி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பேலியகொட பொலிஸ் சட்டத்தரணி சுகந்திக பெர்னாண்டோ என்பவருக்கு எதிராக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் அவர் அந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஏற்றுக் கொண்டமையினால் அவரை எச்சரித்து விடுவிப்பதற்கு கொழும்பு நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 117 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தியதாக பேலியகொட பொலிஸாரினால் சட்டத்தரணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிக்கு உதவியாக ஒருவரும் இல்லாமையினால் குற்றவாளி கூண்டில் ஏறி அவர் குற்றச்சாட்டை ஏற்றுகொண்டுள்ளார்.
இவ்வாறான சிறு வழக்கு ஒன்றுக்காக சட்டத்தரணி ஒருவர் குற்றவாளி கூண்டில் ஏறுவது மிகவும் குறைவு. இந்நிலையில் குறித்த பெண் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டு குற்றவாளி கூண்டில் ஏறியமை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.