ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட நீதிமன்றம் உருவாக்கும் சட்டமூலத்தின் பிரகாரம் மூன்று நீதிமன்றங்களை உருவாக்க முடியும் என்று அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,
குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மூன்று விசேட நீதிமன்றங்களை உருவாக்க முடியும்.
எனினும் ஆரம்பத்தில் ஒரு நீதிமன்றம் மட்டுமே உருவாக்கப்படவுள்ளது. அதன் பின்னர் தேவையைப் பொறுத்து இன்னொரு நீதிமன்றம் உருவாக்கப்படும்.
கடந்த காலங்களில் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க அதன் மூலம் வாய்ப்புக் கிடைக்கும் .
எனினும் அவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கத் தரப்பில் இருந்த சிலரே எதிர்க்கட்சியுடன் இணைந்து கடந்த காலங்களில் சதிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.