Monday, May 14, 2018

How Lanka

ஆசிரியர் விடுதிமீது கல்வீச்சு: மூடப்பட்டது பாடசாலை - பெற்றோர் போராட்டம் - அனலைதீவில் பதற்றம்

எதுவித முன்னறிவப்பம் இன்றி முடப்பட்டுள்ள அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகளை உடனடியாக மீள முன்னெடுத்து  தமது பிள்ளைகளின் கல்விக்கு உத்தரவாதம் வழங்ககுமாறு கோரி அனலைதீவு மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -

சதாசிவ மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட கல்விச்சு தாக்கதல் காரணமாக குறித்த விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக இன்றையதினம் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகைதராமையால் பாடசாலை மூடப்பட்டுள்ளது. இதனால் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 300இற்கம் அதிகமான  மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த பாடசாலை மாணவர்களது பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தினரிடமும் துறைசார் அதிகாரிகளிடமும் எடுத்துக் கூறியும் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாமையால் ஏறமாற்றமடைந்த பெற்றோரும் மாணவர்களும்  பாடசாலை உடனடியாகத் திறக்கப்படவேண்டும் எனக்கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.