Thursday, May 24, 2018

How Lanka

ரென்னிஸ் பெண்கள் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி சம்பியன்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான ரென்­னிஸ் தொட­ரில் 17 வயது பெண்­கள் பிரி­வில் சுண்­டுக்­குழி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி கிண்­ணம் வென்றது

யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரி­யின் ரென்­னிஸ் திட­லில் நேற்று
இடம்­பெற்ற இறு­தி­ ஆட்­டத்­தில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி அணி மோதி­யது.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லா­வது ஒற்­றை­யர் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி அணி­யின் சார்­பில் அஸ்­மி­கா­வும்
யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி அணி­யின் சார்­பில் துலக்­சி­கா­வும் மோதி­னர்.

சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூரி அணி­யின் சார்­பில் விளை­ய­டிய அஸ்­மிதா 6:0, 6:0 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­கை­யும்
கைப்­பற்­றினார்.

இரண்­டா­வது ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூரி
அணி­யின் சார்­பில் அபி­சா­ளி­னி­யும் யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி அணி­யின் சார்­பில் மது­சா­வும் மோதி­னர்.

மது­ சா­ளினி 6:1, 6:2 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு
செற்­க­ளை­யும் கைப்­பற்­றி­யதை அடுத்து

2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது
சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி அணி.