Monday, May 21, 2018

How Lanka

வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு உப்பு நீரில் விளக்கேற்ற பெருங்கடலில் எடுக்கப்பட்ட நீர்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றுவதற்கு இன்று சிலவாத்தை பெருங்கடலில் நீர் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த விசாகப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

குறித்த பொங்கல் விழாவின் போது கண்ணகி அம்மனுக்கு உப்பு நீரில் விளக்கேற்றுவது வழக்கமாக காணப்படுகின்றது.


இவ்வருட விசாகப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கடலில் உப்பு நீர் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்பட்ட உப்பு நீரில் திங்கள் தொடக்கம் அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரைக்கும் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்கேற்றப்படுவது வழக்கமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.