Thursday, May 31, 2018

How Lanka

மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனால் அண்ணாமலை வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாவற்கட்டு மீன்சந்தைக்குச் செல்லும் பிரதான வீதியான அண்ணாமலை வீதிப் புனரமைப்பு ஆரம்ப பணிகள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.


வடக்குமாகாண சபை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் 2018ம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி (PSDG) ஒதுக்கீட்டிலிருந்து 05 மில்லியன் ரூபாவில் இவ் வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


28.05.2018 புதன்கிழமை மு.ப 09.30க்கு இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட வீதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், J/131  சாவற்கட்டு கிராம சேவகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், மகாத்மா சனசமூக நிலையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.