Tuesday, May 15, 2018

How Lanka

எமக்கு எப்போது நீதி கிடைக்கும் குமுதினி படகு படுகொலையின் நினைவேந்தலில் அனந்தி

 1985.5.15 திகதி அன்று நெடுந்தீவு மாவலிதுறையில் இருந்து காலை 07.00 மணியளவில் 67 பயணிகளுடன் குறிகட்டுவான் நோக்கி சென்றவேளை கடற்படையினரால் நடுக்கடலில் குமுதினி படகு தடுத்து நிறுத்தப்பட்டு


சிவில் உடையில் வந்த 6 கடற்படையினர் குமுதினி படகில் எறி அங்கு இருந்தவர்களை வாளாலும் கொடரியாலும் வெட்டி தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்தினார்கள்.

கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டார்கள் இந்த சம்பவத்தின் போது 36 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் மற்றையவர்கள் படுகாயத்திற்க்குள்ளாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.


இந்த சம்பவம் இடம் பெற்று 33 வருடங்களாகியும் எமக்கான நீதியும் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கபடவுமில்லை என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

-----------------