Thursday, May 24, 2018

How Lanka

நாடாளுமன்றத்தைச் சூழ வெள்ளம் - விரைவில் மூழ்கும் அபாயம்

நாடாளுமன்றப் பிரதேசத்தைச் சுற்றிலும் வௌ்ளம் சூழத் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் முப்படையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள தியவன்னா ஆற்றில் நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற வளாகத்திலும் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் தியவன்னா ஆற்றின் நீர் அதிகரிப்பு தொடர்பில் ஆராய ராணுவ பிரிகேடியர் ஒருவரின் தலைமையில் நேற்றைய தினம் குழுவொன்று படகுகளில் தியவன்னா ஆற்றில் பயணித்து களநிலைமைகளை அவதானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக தியவன்னா ஆற்றில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படையினரின் வள்ளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் திடீர் வெள்ளம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதனைச் சமாளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்ற பொலிஸ் சாவடியில் கடமையில் உள்ள பொலிஸாரும் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது