தமிழனை ஆளவிட்டால் முன்னேறிவிடுவான் என்றுதான் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு அழித்து வருகின்றார்கள் என யாழ். பொன்னாலை மீள்குடியேற்ற கிராமத்தில் வாழும் ஒரு சாதனை இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நிலக்கீழ் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்காக புதிய முறைமை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன்காரணமாக பெரிதும் பயன்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு புதிய முயற்சி என்பதுடன், இதன் பலன் அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும் என்பதோடு, இதனை ஊக்குவிக்க அரசும் சமூகநலன் நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பலராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கோர யுத்தத்தின் காரணமாக இதுபோன்ற பல சாதனை தமிழர்கள் இழக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர்கள் ஆட்சி செய்யும் நிலை ஒன்று ஏற்பட்டால், அனைத்திலும் முன்னேற்றமடைந்து அனைவருக்கும் சவாலாகிவிடுவார்கள் என்ற காரணத்தினால்தான் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர் என இத்தருணத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சாதனை தமிழர்கள் தமிழர் தாயகம் முழுதும் இளைமறை காய்களாக உள்ளார்கள் என்பதோடு, அவர்களது திறமை வெளி உலகிற்கு சரியான முறையில் வெளிப்படுத்தப்படவேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.