முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பிரஜா உரிமை பறிக்கப்பட வேண்டும் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு அதனை ஆதாரமாக கொண்டு இவருக்கு எதிராக சட்ட நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பதவி வகிக்கும் அமைச்சர் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் இவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தின் ஏ பிரிவில் ஐக்கியபடுத்தப்பட்டுள்ள ஒற்றையாட்சி இலங்கை குடியரசில் இனவாத கருத்துக்களை பரப்பி தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுத்து தேசதுரோகம் செய்யும் அமைச்சர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு பிரஜாவுரிமை இரத்து செய்வதோடு அமைச்சு பதவியும் இரத்து செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.