Saturday, October 27, 2018

How Lanka

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - குழப்பத்தில் அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவிய போது பதிலளித்த அவர், “சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அனைத்துக்கும் முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் பட்சத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைந்து அதனை வெற்றி பெற செய்யலாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக அரசியல் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.