வெஸ்ட் இண்டீஸ் உடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.
இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது.
தொடர்ச்சியாக 3-வது முறையும் இப்போட்டியில் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்துவாரா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதன்படி ரசிகர்களை ஏமாற்றாமல் விராட் கோஹ்லி இந்த முறையும் சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்தியா மோதிய கடைசி ஒருநாள் தொடரிலும் விராட் கோஹ்லி சதம் அடித்து சாதனை புரிந்திருந்தார்.
தற்போதும் வெஸ்ட் இண்டீஸ் உடன் தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடரில் சதம் அடித்து விளாசியது மூலம், எதிரணியுடன் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி புரிந்தார்.
விராட் கோஹ்லி சதம் அடித்திருந்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் இந்த போட்டியில் பெரிதாக ஜொலிக்கவில்லை. விராட் கோஹ்லியே தனி ஆளாக வெற்றிக்கு போராடி வந்தார். இருப்பினும் 107 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தார்.
ஷிகர் தவான்(35), ரிஷப் பண்ட்(24), அம்பத்தி ராயுடு(22), குல்தீப் யாதவ்(15) ஓட்டங்கள் எடுக்க எஞ்சியவர்கள் யாரும் 10 ரன்களை தாண்டவில்லை.
47.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தனி ஆளாக போராடிய விராட் கோஹ்லியின் சதமும் வீணானது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது, இந்தியா 1 வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் 1 வெற்றியும் பெற்றுள்ளன. 1 போட்டி சமனில் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.