வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் டோனியின் அதிரடி நீக்கம் குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் நவம்பர் 11-ந்தேதி நடைபெறும் 20 ஓவர் போட்டியில் தோனி ஆடாமல் இருப்பது தமிழக ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டோனி 20 ஓவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. அவருக்கு ஓய்வுதான் (6 ஆட்டம்) கொடுக்கப்பட்டுள்ளது என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
“இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் 6 இருபது ஓவர் போட்டியில் டோனி இடம் பெறவில்லை. 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதனால் டோனிக்கு ஓய்வு தான் கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டியில் டோனியின் எதிர்காலம் முடிந்து விடவில்லை” என கூறியுள்ளார்.
இந்திய அணி 104 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 93 ஆட்டத்தில் டோனி ஆடி இருக்கிறார். 20 ஓவரில் தனித்திறமையை வெளிப்படுத்தும் அவரது நீக்கம் ஏமாற்றம் அளிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.