Friday, October 26, 2018

How Lanka

பிரதமர் நானே! ரணில் அதிரடி அறிவிப்பு - மைத்திரியின் செயற்பாட்டிற்கு விசனம்

சமகால அரசாங்கத்தின் பிரதமராக நானே உள்ளேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எனினும் நானே நாட்டின் பிரதமர் நானே என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான முறையில் மஹிந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பு நடைமுறைகளை மீறி மஹிந்தவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு அவ்வாறு பிரதமர் பதவி வழங்க முடியாது. அது சட்டவிரோத செயல் என ரணில் சுட்டிக்காட்டியள்ளார்

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என ரணில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரணிலை ஏமாற்றிய 20 ஜ.தே.க வினர் - விசேட சந்திப்பில் மகிந்த - மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் பிரதமராக சற்று முன்னர் பதவியேற்றார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய கிட்டத்தட்ட 20 உறுப்பினர் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய பிரதமர் மஹிந்தவை ஏற்று கொண்டு புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு குறித்த உறுப்பிர்கள் ஆயத்தமாகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும், புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் தற்போது இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.