இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் சிக்சர்களாக விளாசியதன் மூலம், அந்த அணி 16.1 ஓவர்களில் 153 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என நீண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் டி ஆர்க்கி ஷார்ட் 7 ஓட்டங்களிலும், ஆரோன் பிஞ்ச் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கிறிஸ் லின், மேக்ஸ்வெல் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கலீல் அஹமது வீசிய 8வது ஓவரில் கிறிஸ் லைன் மூன்று சிக்சர்களை விளாசினார்.
அவருக்கு இணையாக மேக்ஸ்வெலும் சிக்சர்களை பறக்க விட்டார். இந்நிலையில் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி 4 சிக்சர்களுடன் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கிறிஸ் லின் ஆட்டமிழந்தார்.
எனினும் அடுத்த வந்த ஸ்டோய்னிஸும் அதிரடியில் இறங்கினார். இதனால் அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில், அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.