ஹிங்குரான-முவன்கல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அதி தீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருவதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மோட்டார் சைக்கிளானது ஹிங்குரான பிரதேசத்தில் இடம்பெறும் மோட்டார்சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்துக்கொள்ள சென்ற மோட்டார் சைக்கிளென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது