அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 25 மதுபான போத்தல்களை கொண்டு சென்ற
நபர் ஒருவரையும் விற்பனையாளரையும் ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹற்றனிலிருந்து டிக்கோயா பகுதிக்கு முச்சக்கர வண்டியில் இன்று அதிகாலை மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாலையிலேயே மதுபானசாலையை திறந்து விற்பனையில் ஈடுபட்டவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் மீட்கப்பட்ட மதுபான போத்தல்களையும், முச்சக்கரவண்டியையும், பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து ஹற்றன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹற்றன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.