ஒன்றரை கிலோ தங்கத்துடன் 3 இலங்கையர்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ரூபாவின் படி இதன் பெறுமதி 46 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து யு.எல்.161 என்ற விமானம் மூலம் நேற்று காலை 8.45 மணியளவில் இவர்கள் இந்தியா சென்றுள்ளதாகவும், யோகேஸ்வரி செல்லத்தம்பி, சுசிகலா யோகேஸ்வரன், ராமக்கல் ராமசாமி ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களிடம் இருந்து 8 தங்க வளையல்கள், 4 தங்கச் சங்கிலிகள், பென்டன்கள் பத்து உள்ளிட்ட பல தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானநிலைய தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.