ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை கட்டடத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் மனநோய் காரணமாகவே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சம்பவம் ஹம்பாந்தோட்டை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர் .