அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம்..............
எனக்கு தகுதி இல்லையென்று ஏனைய பணியாளர்கள் முன்னிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எனது விண்ணப்ப படிவத்தை நிராகரித்துவிட்டது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் ஸ்மிருதி இரானி கூறியதாவது, தொலைக்காட்சியில் சிறந்த நடிகையாக இருந்த நான் அரசியல்வாதியாவதற்கு முன்பாக McDonald's நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பின்னர் நடந்தவை அனைத்தும் வரலாறு ஆகும்.
பெரும்பாலான மக்களுக்கு தெரியாது, நான் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பணிபெண் வேலைக்கு விண்ணப்பித்தேன் என்று. ஆனால் எனக்கு அதற்கான தகுதி இல்லையென்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. அதற்கு பின்பு தான் McDonald's வேலை கிடைத்தது. இதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்திய விமான பயணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த விழாவில் ஒரு பயணியாக கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.