ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கின் பாராட்டு விழாவில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், பி.வி.சிந்துவின் ஊர் கர்நாடகம் என மாற்றி கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இன்று காலை தாயகம் திரும்பினார். அதனைத்தொடர்ந்து, ஹரியானாவில் அரசு சார்பாக அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கதூர்கர் நகரில் இன்று காலை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற அரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சாக்ஷியை வாழ்த்தியதுடன் இரண்டரை கோடி ரூபாய்க்கான பரிசு காசோலையை அளித்து கவுரவித்தார்.
பின்னர் இன்று மாலை ஹரியானாவின் ரோடேக் மாவட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சாக்ஷி மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வினாயகர் சிலை உள்ளிட்ட நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழா மேடையில் பேசிய ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், பாட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவின் சொந்த மாநிலம் கர்நாடகம் என பேசினார்.
ஏற்கனவே பி.வி.சிந்துவிற்கு ஆந்திராவும், தெலங்கானாவும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், சிந்துவின் மாநிலத்தை கட்டார் மாற்றிக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.