அவுஸ்திரேலியாவின் உள்ளூர் 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரின் சம்பியன்களாக, நியூ சௌத் வேல்ஸ் அணி தெரிவாகியுள்ளது. குயீன்ஸ்லாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றே, சம்பியன் பட்டத்தை அவ்வணி பெற்றுக் கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட குயீன்ஸ்லாந்து, 46.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. உஸ்மான் கவாஜா 35, கமெரோன் கனொன் 28, நேதன் றியர்டன் 27, லூக் ஃபெல்மான் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நேதன் லையன், 10 ஓவர்களில் 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ட்ரென்ட் கோப்லன்ட், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலளித்தாடிய நியூ சௌத் வேல்ஸ் அணி, 43.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 85, குர்திஸ் பற்றெர்ஸன் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவிச்சில் மைக்கல் நேசர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக நேதன் லையன் தெரிவாக, தொடரின் நாயகனாக, குயீன்ஸ்லாந்தின் மார்னஸ் லபுஸ்சக்னே தெரிவானார்.