ஜேர்மனி நாட்டில் இளம்பெண்கள் பயன்படுத்திய கணிணிகள் மூலம் அவர்களை ரகசியமாக உளவு பார்த்து வந்து மாணவனுக்கு நீதிமன்றம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பவேரியா நகரை சேர்ந்த 23 வயதான மாணவன் கடந்த 2010ம் ஆண்டு கணிணிகளை ரகசியமாக உளவு பார்க்கும் மென்பொருள் ஒன்றை 50 டொலருக்கு வாங்கியுள்ளார்.
பின்னர், இளம்பெண்கள் பயன்படுத்தும் 32 கணிணிகளில் அவற்றை ரகசியமாக பொருத்தியுள்ளார்.
இதன் மூலம், அக்கணிணிகளில் பெண்கள் என்ன செய்கிறார்கள்? தட்டச்சுக்களில் என்ன பதிவு செய்கிறார்கள்? என்பதை ரகசியமாக உளவு பார்த்து வந்துள்ளார்.
துரதிஷ்டவசமாக செல்போன்கள் மூலம் படம் பிடித்த தங்களுடைய நிர்வாண புகைப்படங்களை சில பெண்கள் கணிணிகளில் பதிவு செய்ததால் அவற்றையும் அந்த மாணவன் தரவிறக்கம் செய்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், பெண்கள் பயன்படுத்திய சுமார் 16,000 புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் மாணவர் திருடியுள்ளார்.
இவ்விவகாரம் வெளியே பரவியதை தொடர்ந்து 15 பெண்கள் மாணவன் மீது புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால், இவ்வழக்கு தொடர்பான செய்திகள் எதுவும் வெளியே வரவில்லை. எனினும், மாணவர் மீதான வழக்கை விசாரணை செய்யும் வழக்கறிஞர் ஒருவர் பேசியபோது ‘குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கு கடந்த புதன்கிழமை அன்று நீதிபதி 1,000 யூரோ(1,60,481 இலங்கை ரூபாய்) அபராதம் விதித்தாக’ தகவல் அளித்துள்ளார்.