காலி போப்பே புகையிரத கடவையில் வைத்து புகையிரதம் உன்று காருடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காலிக்குச் சென்ற இரவு நேர புகையிரதம் ஒன்றே காருடன் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 45 வயதுடைய வழக்கறிஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர் கரப்பிட்டிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், புகையிரத கடவை இயக்குனர் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.