Sunday, November 6, 2016

How Lanka

அழகாக அமர்ந்திருக்கும் இராணுவ வீரரின் ஆவி

குழந்தைகளுடன் மியூசியத்துக்கு சென்று போது அங்கு தான் எடுத்த புகைப்படத்தில் இரண்டு பேய் போன்ற உருவங்கள் தெரிவதாக இளம் பெண் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டில் உள்ள கார்டிப் நகரில் புகழ் பெற்ற National History Museum அமைந்துள்ளது. அந்த மியூசியத்துக்கு Charlotte Harding (30) என்ற பெண் தன் இரு குழந்தைகளான Ethan(4) மற்றும் Harrison(2)ஐயும் அழைத்து கொண்டு போயுள்ளார்.

அப்போது அங்கு பல இடங்களை புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்து தான் எடுத்த புகைப்படங்களை அவர் பார்க்கும் போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அதில் ஒரு புகைப்படத்தில் தன் குழந்தை விளையாடுவது போலவும் அருகில் உள்ள முட்புதர் செடியில் இரண்டு போர் வீரர்கள் நீல நிற ஆடை அணிந்து நிற்பது போல ஒரு மங்கலான உருவம் அவருக்கு தெரிந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் எடுத்த அந்த புகைப்படத்தில் இரண்டு போர் வீரர்களின் பேய் போன்ற உருவம் தெரிந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை பார்த்ததிலிருந்து தூங்க முடியாமல் பயத்தில் தவிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

மேலும், அந்த இடத்தில் 1648 ஆண்டு காலகட்டத்தில் போர்கள் நடந்துள்ளது. அதில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். இந்த புகைப்படத்தில் இருப்பது அவர்கள் ஆவியாக இருக்கும் என தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதிலெல்லாம் நம்பிக்கையில்லாத Charlotte கணவர், தன் மனைவி எடுத்த புகைப்படத்தில் தெரிவது வெறும் பூக்கள் தான், அவர் பயத்தால் அதை பேய் என கூறுவதாக தெரிவித்துள்ளார்.