டிசம்பர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள தனியார் பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக , கல்வி பொதுத்தரா தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து இலங்கை தனியார் பஸ்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டாலின் பெர்னாட்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களின் பரீட்சை எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிப்பதாலேயே நாம் பணிப்பகிஷ்கரிப்பை டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கினறோம்.
எவ்வாறாயினும் குறித்த பிரச்சினைக்கான தீர்வு பரீட்சைக்கு முன்னர் கிடைத்துவிடும்.
அவ்வாறு கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாம் பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்திவிட்டு, பரீட்சைக்காலத்திர் சேவைகளை ஆரம்பிப்போம்.
மாணவர்களின் கல்விக்கு நாம் முக்கியத்துவத்தை அளிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
பஸ்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.