Saturday, November 26, 2016

How Lanka

யாழ்பாணத்தில் அதிகரிக்கும் மதுபான நுகர்வு! எங்கு செல்கிறது யாழ்பாணம்

யாழ்ப்பாணத்தில் மதுபானங்களின் நுகர்வு வருடாந்தம் அதிகரித்து செல்வதாக மது வரித்திணைக்களத்தின் வடமாகாண உதவி பொறுப்பதிகாரி நி. சோதிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் தை முதல் கடந்த ஒக்டோபர் மாத இறுதி வரை 35,51,492.359 லீற்றர் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.

இதில் சாராயம் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும்,பியர் வகை மதுபானங்கள் மொத்தமாக 16,76,117.6 லீற்றர்களும்,ஸ்பிறிட் வகை மதுபானங்கள் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும், விற்பனையாகியுள்ளன. இதனடிப்டையில் கடந்த வருடத்துடன் ஒப்பி டும் போது இவ்வருடத்தில் மதுபானங்களின் நுகர்வு அதிகரித்தள்ளது. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் குறித்த நுகர்வு அதிகரித்து செல்லும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளது.

இதற்கு சமீபநாட்களாக பாடசாலை மாணவர்கள், பெண்கள் என அனேகர் மது பாவனைக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளமை கவலையளிப்பதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் உல்லாச பயணிகளின் வருகை அதிகரிப்பினால் அவர்கள் கொள்வனவு செய்யும் மது பான ங்களும் மொத்த நுகர்வில் சேர்க்கப்படுகின்றது . இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள பெருமளவு இராணுவத்தினர் கொள்வனவு செய்யும் மதுபானங்களும் அதில் இணைக்கப்படுகின்றது.

இருப்பினும் நம்மவர்களின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. மதுபான நுகர்வை குறைப்பதற்காக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது . மதுபானக்கடைகளுக்கான வரிகள் , கட்டணங்கள் என்று மில்லா வண்ணம் அதிகரித்துள்ளது. சிகரட்டின் விலைகளும் தற்போது அதிகரித்துள்ள நிலையில் இனிவரும் காலங்களில் சிகர ட்டை சில்லறையாக விற்கமுடியாது பக்கற் அடிப்படையிலேயே விற்பனை செய்ய முடியும். இதன்மூலம் சிகரட்டின் விற்பனையை கட்டுப்படுத்த தற்போதைய அரசு முயன்று வருகின்றது .

தற்போது பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அரசின் முயற்சியுடன் இணைந்து மது , போதை போன்றவற்றை ஒழிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.