புதுடெல்லி விமான நிலையத்தில் நேருக்குநேர் வந்த இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக ரயில், வீதி மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து வீதி விபத்துகள் ஏற்படும் அதேவேளை விமானங்கள் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்படுதல், மாற்றியமைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மிகவும் நெருக்கமாக வந்ததன் காரணமாக அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.
லக்னோவில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் 176 பயணிகள் இருந்ததுடன் இரு விமானிகளும் தமது முழு திறனையும் பயன்படுத்தி விமானத்தை நிறுத்தியுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.