ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரண்டு தொடர் குண்டுத் தாக்குதல்களில் 30 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கன்டஹாரிலுள்ள ஆளுனரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு தலிபான் ஆயுததாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவரும் அடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள உளவுத்துறை அதிகாரியொருவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலிருந்து உத்தியோகத்தர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தில் காபூல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.