வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த அநாமதேய தகவல் காரணமாக நேற்றிரவு 8 மணிக்கு புறப்படவிருந்த பதுளைக்கான தபால் ரயில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பதுளைக்கான தபால் ரயில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் தாமதத்தின் பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது ரயிலில் சுமார் 1000 இற்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன், பயணிகளை ரயிலிலிருந்து அப்புறப்படுத்திய பின்னர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோட்டை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆகியன இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளன.
சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது