வர்தா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – சென்னைக்கு இடையிலான விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகியது.
சென்னைக்கான விமான சேவைகளை இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பின்னர் ஆரம்பமாகியது என விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
சென்னை நோக்கிய இன்னும் சில விமான சேவைகள் பகல் 12 மணிக்குப் பின்னர் ஆரம்பமாகியதாகவும் அவர் கூறினார்.
வர்தா சூறாவளி காரணமாக சென்னை – கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.