Monday, February 27, 2017

How Lanka

அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டேன் - அதுரலியே ரதன தேரர்


அரசாங்கதின் நகர்வுகள் தொடர்பில் பூரண திருப்தி இல்லை என்பதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை. அரசாங்கத்தில் இருந்தே அரசை வலியுறுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். எவருடனும் தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் உறுப்பினருமான அதுரலியே ரதன தேரர் சுயாதீனமாக செயற்படப்போவதாகவும் ஹெல உறுமைய கட்சியின் இரகசியங்களையும், அரசாங்கத்தின் மோசடிகளையும் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் இன்று மத்துகமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.