மாத்தளை மாவட்டத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது.
லங்கல பிரதேசத்தில் மீட்கப்பட்ட இந்த இரத்தினக்கலின் பெறுமதி 300 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தளை இரத்தினக்கல் வர்த்தகருக்கு கிடைத்துள்ள இந்த நீல இரத்தினக்கல் 800 கிராம் நிறையுடையதாகும்.
தற்போது இந்த இரத்தினக்கல் அரச வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது