பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் வட்ஸ் அப் சேவையானது பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. இந்த வரிசையில் தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள நாளாந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் சுமார் 4.5 பில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுவதுடன் ஒரு பில்லியன் வரையான வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றது. இவை தவிர 55 பில்லியன் குறுஞ்செய்திகளும் நாளாந்தம் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் உலகெங்கிலும் ஒரு பில்லியன் பயனர்களை எட்டிய வட்ஸ் அப் ஆனது இந்த வருடம் நாளாந்த செயற்பாட்டு நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை ஒரு பில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. உலகெங்கிலும் சுமார் 60 வரையான மொழிகளில் வட்ஸ் அப் சேவை கிடைக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Friday, July 28, 2017
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து WhatsApp சாதனை