ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க அரசியலுக்கு வரவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினரின் அழைப்புக்கு அமைய சுசந்திக்கா அரசியலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் அவரை தேர்தலில் களமிறக்குவதாகவும், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் 1948ஆம் ஆண்டில் இருந்து இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்காக விருது வழங்கும் நிகழ்வு ஒன்று ஏறபாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் சுசந்திக்கா ஜயசிங்க கலந்து கொள்ளாத விடயம் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.