Tuesday, July 18, 2017

How Lanka

துளிப்பொழுதில் தப்பியது இலங்கை அணி - சாதனைகளுடன் திகில் வெற்றி

சிம்பாப்வே உடனான டெஸ்ட்


இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

சிம்பாப்வே அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 388 எனும் பாரிய ஓட்ட இலக்கை கடந்து இவ்வெற்றியை பெற்றுள்ளது.


 அதன் மூலம் இவ்வோட்ட எண்ணிக்கை, இலங்கை அணி டெஸ்ட் போட்டி ஒன்றில் கடந்த, அதிகூடிய ஓட்ட வெற்றி இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா அணியுடனா போட்டியில் 352 ஓட்டத்தை கடந்தமையே, டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணி கடந்த அதிகூடிய வெற்றி இலக்காகும்.!
218 ஓட்டங்களை பெற்றால் வெற்றி எனும் நிலையில், மூன்று விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் (170/3) என்ற நிலையில் இன்றைய ஐந்தாவது நாளை ஆரம்பித்த இலங்கை அணியின் இரு விக்கெட்டுகள் (குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்திவ்ஸ்) 33 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.
வெற்றி பெறுவது கடினம் (203/5) எனும் நிலை ஏற்பட்டிருந்த வேளையில், களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
சிம்பாப்வு 356 & 377
இலங்கை 346 & 391/6
நிரோஷன் திக்வெல்ல 81
அசேல குணரத்ன 80*
இப்போட்டியின் நான்கு இன்னிங்ஸிலும் 300 இற்கும் 400 இற்கும் இடைப்பட்ட ஓட்டங்கள் பெறப்பட்டமை சிறப்பம்சமாகும். டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு பெறப்பட்ட 3 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் நாயகனாக அசேல குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
ஒரே ஒரு போட்டியைக் கொண்ட இத்தொடரின் நாயகனாக ரங்கன ஹேரத் தெரிவு செய்யப்பட்டார்.
 
சாதனைகள் 
- இலங்கை அணி கடந்த அதிகூடிய வெற்றி இலக்கு (388)
- அதிகூடிய டெஸ்ட் ஓட்ட வெற்றி இலக்கு கடந்த வரிசையில் 5 ஆவது இடம்
418 - WI v AUS
414 - SA v AUS
406 - IND v WI
404 - AUS v ENG
391 - SL v ZIM 
- ஆசியாவில் அதிகூடிய டெஸ்ட் ஓட்ட வெற்றி இலக்கு எட்டப்பட்டது.
- 4 ஆவது இன்னிங்ஸிற்காக சதம் பெறப்படாமல், பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட வரிசையில் நான்காவது இடம்.
445 Ind vs Aus, Adelaide, 1978. 
431 NZ vs Eng, Napier, 2008
391 SL vs ZIM, RPS, இன்று 2017
- நான்கு இன்னிங்ஸிலும் 300 - 400 இடைப்பட்ட ஓட்டம் பெறப்பட்ட 3 ஆவது சந்தர்ப்பம்
முழு ஓட்ட விபரம்